மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்ட காலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து இன்றைய தினம் (24/01) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாண ஆளுநரின் தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாகவே குறித்த நியமனம் இதுவரை வழங்கப்படாதுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கப்படவிருந்த நிலையில், அது மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டிருந்தாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
