ரஞ்சனின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீதான இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிவரை குறித்த வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக அவர் இன்று (24/01) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரஞ்சனின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

Social Share

Leave a Reply