பொலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை அனுஷ்கா ஷர்மா இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தங்களது முதல் குழந்தைக்கு வாமிகா கோலி என பெயர் வைத்துள்ளனர்.
இதுவரை தனது குழந்தையின் புகைப்படத்தை அனுஷ்கா மற்றும் விராட் கோலி இருவரும் வெளியிடவில்லை.
இந்நிலையில், முதல் முறையாக நடிகை அனுஷ்கா ஷர்மா தனது மகள், வாமிகாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
