சிம்பாவே நாட்டில் தற்போது கொவிட் தொற்றாளர் குறைந்து வரும் நிலையில் கடந்த நாளில் மாத்திரம் சிம்பாவேயில் 145 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சிம்பாவே அரசு உணவு விடுதிகள், ஆலயங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் என்பவற்றை திறக்க அனுமதித்துள்ளது.
இந்நிலையில் கொவிட் தடுப்பூசி போடுதலைக் கட்டாயமாக்கும் பொருட்டு சிம்பாவே அரசு கொவிட் தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட அரச ஊழியர்களை மாத்திரம் பணிக்கு செல்ல அனுமதித்துள்ளதாக அந்நாட்டு தகவல்தொடர்பு அமைச்சர் மோனிகா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சிம்பாவேயில் இதுவரை 12 வீதமானோரே கொவிட் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாததன் காரணமாக அரச ஊழியர்களுக்கு இவ்வாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்
