இலங்கை பொலிஸாருக்கு பயிற்சியளிப்பதற்கு பிரித்தானியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பொலிஸாருக்கு பயிற்சியளிக்கும் ஒப்பந்தத்திலிருந்து ஸ்கொட்லாந்து விலகியுள்ள நிலையில், பிரித்தானியா தொடர்ந்தும் பயிற்சியளிப்பதற்கு இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் பாதுகாப்பு தரப்பினை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இலங்கையில் பாலியல் ரீதியான சித்திரவதைகள்,மனித உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் இடம்பெறுவதாக ஸ்கொட்லாந்திற்கு புலம்பெயர்ந்தவர்கள் தெரிவித்தமையை தொடர்ந்து ஸ்கொட்லாந்து தமது பயிற்சி திட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
