வத்தளை பொது மயானத்தில் இந்து மக்கள் தங்களை இறுதி சடங்குகளை செய்வதற்கான மண்டம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. வத்தளை மாபொல நகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த நிர்மாண பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மயானத்தில் இறுதி கிரியைகளை செய்வதற்கு மண்டபம் ஒன்றில்லை என்பதனை வத்தளை மாபொல நகரசபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவரும் கம்பஹா மாவட்ட அமைப்பாளருமாகிய சுப்ரமணியம் சசிக்குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மக்களின் வேண்டுகோளை ஏற்று 2022ம் ஆண்டுக்கான வத்தளை, மாபொல நகரசபை உறுப்பினர் சசிகுமாருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருபது இலட்சம் ரூபாவில் தற்பொழுது அந்த மண்டபம் கட்டுவதற்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
வரலாறு காணாத ஒரு நிகழ்வாகவும், வத்தளை வாழ் மக்களுக்காக வத்தளை நகரில் உருவாகும் இந்த மண்டபம் விரைவில் பூரணப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என வத்தளை, மாபொல நகரசபை உறுப்பினர் சசிகுமார் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.