ஹட்டன் – டிக்கோயா பகுதியில் ஆடை தொழிற்சாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (28/01) காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 16 பேர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்தனர்.
