இருவேறு இடங்களில் இடம்பெற்ற கொலைகள்

கண்டி – கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹங்கொட பிரதேசத்தில் கொலைச் சம்பவம் ஒன்று நேற்று (30/01) இடம்பெற்றுள்ளது.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், ஒருவர் மற்றைய நபரின் கால்களை மரம் வெட்டும் இயந்திரத்தால் அறுத்து பலத்த காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார்.

பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பொஹலியத்த – கலகெதர பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மாத்தறை – கொக்கரெல்ல பிரதேசத்தில் நேற்று பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொக்கரெல்ல – ரபர்வத்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து இரும்பு கம்பியால் தலையில் தாக்கிக் குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தெஹல்கமுவ – இப்பாகமுவ பிரதேசத்தில் வசித்துவந்த 65 வயதுடைய பெண்ணொருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இருவேறு இடங்களில் இடம்பெற்ற கொலைகள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version