வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப்பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவி பிதுர்சா சற்குணத்தை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் நேற்று (29.04.2025) மாணவியின் இல்லம் சென்று வாழ்த்தி கெளரவித்தார்.
அத்துடன் குறித்த மாணவியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டியிருந்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் மற்றும் வைத்தியர் ஞானசிங்கம் நிரோசன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவர் இரா.அபிசன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
நெளுக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த மாணவி வர்த்தகப்பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.