டொலர் பிரச்சினைக்கு கொவிட் காரணமல்ல.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு கொவிட் சூழ்நிலை முக்கிய காரணமல்லவென வலுசக்தி அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றுள்ள கடன்களே இந்த நிலைக்கு காரணமென கூறியுள்ள அமைச்சர் உதய கம்பன்பில, 1955 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வருமானத்திலும் அதிகரித்த செலவினம் காணப்பட்டு வருகின்றது. அதனை ஈடு செய்வதற்கு தொடர்சியாக வெளிநாடுகளில் கடன் வாங்கப்பட்டு வருகின்றது.

அதிகரித்த கடன் காரணமாகவும், கடனை மீள செலுத்த முடியாத காரணத்தினாலும் டொலர்களில் கடனை பெறமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் காரணமாகவே தற்போதைய டொலர் தட்டுப்பாட்டு சூழ்நிலை உருவாகியுள்ளது. அத்தோடு அரசாங்கம் கடன்களை எவ்வாறு மீள செலுத்துவது என்ற திட்டங்களின்றி கடன்களை பெற்று வருகின்றமையும் நாட்டின் இக்கட்டான பொருளாதார சூழ்நிலைக்கு காரணமென தனதுரையில் அவர் தெரிவித்தார்.

கொவிட் அசாதரண சூழ்நிலை வழமைக்கு திரும்பினாலும் டொலர் பிரச்சினை தீரும் வாய்புகள் குறைவு என தெரிவித்த உதய கம்பன்பில, சுற்றுலாதுறை வழமைக்கு திரும்பி அதன் மூலமாக வருமானம் அதிரிக்கும் பட்சத்திலேயே டொலர் பிரச்சினைக்கு முடிவு கிடைக்குமென தெரிவித்தார்.

1979 ஆம் ஆண்டு ஏற்றுமதியிலும் பார்க்க, இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. தற்போது அரிசி, மரக்கறி போன்றனவும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இறக்குமதி குறைக்கப்பட்டு, உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலமே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிலிருந்து நாட்டை மீட்க முடியுமென தேசிய தொழில் நிறுவகத்தின் கண்காட்சியில் உரையாற்றிய போது மேற்கொண்ட தகவல்களை தெரிவித்தார்.

டொலர் பிரச்சினைக்கு கொவிட் காரணமல்ல.
Social Share
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version