தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் இன்று முதல் ஏலத்தில் விடப்படுமென கடற்றொழில் திணைக்களம் அறிவித்தது போன்று முதல் நாளான இன்று யாழ்ப்பாணம், காரைநகர் துறைமுகத்தில் தரித்து நிறுத்தப்பட்டிருந்த 135 படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
48 அடி நீளமான ட்ரோலர் படகு அதிகபட்சமாக 13 இலட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யவேணடாமென கோரிக்கையினை முன்வைத்துள்ள நிலையிலும், தாம் அவற்றை விரைவில் தமிழகத்துக்கு எடுத்து செல்வதாக தெரிவித்திருந்த போதும், குறித்த ஏலம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
தமிழக, இலங்கை வடக்கு மீன்வர்களுக்கிடையில் முறுகல் நிலை தொடர்ந்து வருகின்றது. அத்தோடு படகுகளை ஏலத்தில் விற்க வேண்டாமென தமிழக மீனவர்கள் இராமேஸ்வரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
