O/L விண்ணப்ப கால எல்லை நீடிப்பு

2021 O/L கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார்.

மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னர் பெப்ரவரி 03 வரை நீடிக்கப்பட்டிருந்த குறித்த விண்ணப்பம் கோரும் இறுதித் திகதி பெப்ரவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்ட நிலையில், அது மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இணைய முறையூடாக பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk அல்லது onlineexams.gov.lk/eic அல்லது உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசி செயலியான ´Exams Sri Lanka´ (Android | iOS) ஊடாக, அறிவுறுத்தல்களை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.

O/L விண்ணப்ப கால எல்லை நீடிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version