உலகளவில் மீண்டும் கொரோனா அச்சறுத்தல் – தம்மை தாமே காப்பாற்ற வேண்டும்

உலகளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக வெளிநாட்டு செய்திகள் மூலம் அறிய முடிகிறது. ஐரோப்பாவின் சில நாடுகள் மீண்டும் கடுமையான பாதுகாப்பினை ஆரம்பித்துளள்ன.

கடந்த ஐந்து தினங்களில் உலகளாவிய ரீதியில் ஒரு இலட்சத்துக்கு அதிகமான தொற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த இறப்புகள் 46 இலட்சத்தை தாண்டியுள்ளன. இந்த ஐந்து தினங்களில் இறப்புகள் 3000 இனால் அதிகரித்துள்ளன.

ஒரு நாளைக்கு இறப்பவர்களது எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளன. இந்த 10,000 இல் கட்டுப்பாடுகள் தகர்க்கபப்ட்டு இலகுபடுத்தல்கள் வழங்கப்படும் நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுளள்து. இந்த எண்ணிக்கையில் மிக சிறிய நாடான நாங்கள், இலங்கையில் 1.5% பங்களிப்பினை வழங்கியுள்ளோம்,

சுவிற்சலாந்தில் வேலைக்கு செல்பவர்கள் அனைவருக்கும் மிகவும் கடுமையான பாதுகாப்போடு வேலை செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்தில் மீண்டும் தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் இந்தியா அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரிக்கு தொற்று ஏற்பட்டு ஒரு டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது. இங்கிலாந்தில் உள்ளவர்கள் மூலமாக அங்கே தொற்று அதிகரிப்பதாகவும், இறுக்கமான கட்டுப்பாடுகள் அதிகரிப்பதாகவும் தெரியவருகிறது.


சீனாவில் மீண்டும் தொற்று அதிகரித்து வருவதனால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டன. சிறுவர்களுக்கான தொற்று அதிகரித்து வருவதனால் அமெரிக்காவில் பெற்றோர் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவது குறைந்து வருவதாக அமெரிக்காவை தளமாக கொண்ட செய்தி சேவை ஒன்று செய்தியினை வெளியிட்டிருந்தது.


இலங்கையிலும் தொற்று மீண்டும் அதிகரிப்பும் வாய்ப்புகள் உள்ளதாகவும், நாட்டை உடனடியாக திறக்க வேண்டாமெனவும் சுகாதர தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.


உலகமும், நாடுமும் தொற்றால் பாதிக்கப்பட்டு பயந்து கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் மக்கள் எந்த பயமுமின்றி வீதிகளில் உலாவுவதை பார்க்க கூடியதாக உள்ளது. உறவினர்களோடு கொண்டாடடங்களில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது.


ஆடம்பர கடைகளுக்கு பொருட்களை வாங்க செல்வதனை அவதானிக்க முடிகிறது. கொடிய கொரோனோவால் பலர் இறந்தும், பலர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுமுள்ளனர். ஆனால் மக்கள் தங்களை பாதுகாக்க தவறி வருகின்றமை கவலையளிக்கிறது.


அவதானமற்ற சிலரினாலே, அவதானமாக இருக்கும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சுகாதர துறையினர் தங்கள் உயிரை பயணம் வைத்து. தங்கள் குடும்பத்தை இழந்து மக்களுக்காக, அவர்களை காப்பாற்ற போராடி வரும் நிலையில் மக்களின் இவ்வாறான செயல் கோபத்தையே ஏற்படுத்துகிறது.


அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழல் இன்னமும் காணப்படுகிறது. சுகாதர துறையும், அரசாங்கமும் சொல்வதனை செவிமடுத்து செயற்படுவதன் மூலமே மக்கள் தங்களை பாதுகாக்க முடியும்.

ச.விமல்
பணிப்பாளர்
வி தமிழ்

உலகளவில் மீண்டும் கொரோனா அச்சறுத்தல் - தம்மை தாமே காப்பாற்ற வேண்டும்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version