சாணக்கியனின் ட்விட் தவறானது – பொலிஸ்

கடந்த 17 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உப செயலாளர் நிதன்சனை வெள்ளை வானில் வந்து தம்மை குற்ற புலனாய்வு பிரிவினர் என அறிமுகம் செய்து கடத்த முயற்சித்ததாகவும், இந்த சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அந்த தகவல் தவறானது எனவும் பிழையான தோற்றப்பாட்டை உருவாக்குவதாகவும் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், வெள்ளை வானில் பயணித்த மற்றொரு குழுவினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அருள் ஞானமூர்த்தி நிதன்ஷன் என்ற இளைஞரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை வானின் பயணித்த இருவரும் வர்த்தகர்கள் எனவும், அரச புலனாய்வுப் பிரிவுகளுடன் எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர்கள் என்றும், நிதன்ஷன் கடத்தப்படவில்லை என்றும் பொலிஸார் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை மற்றும் தவறாக வழிநடத்துகின்றன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபரின் கீழ் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாணக்கியனின் ட்விட் தவறானது - பொலிஸ்
Social Share
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version