இன்று விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று கூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மின் தடை சம்மந்தமாக கலந்தாலோசித்து முடிவெடுக்கும் நோக்கிலேயே இன்று (22.02) இந்த கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
தொடர்ச்சியாக சிக்கல்களை உருவாக்கி வரும் மின் தடைக்கு இன்று முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.