புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு

புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கைப் புகையிரதத் திணைக்களத்துக்குச் சொந்தமான இரத்மலானை இயந்திரப் பொறியியல் தொழிற்சாலைக்கு இன்று (24.02) முற்பகல் கண்காணிப்பு விஜயம் செய்த போதே, ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்தார்.

ஆட்சேர்ப்பு மற்றும் வள முகாமைத்துவம் உட்பட தற்போதுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் இரண்டு மாதங்களுக்குள் தீர்க்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version