சீர் மிகு சீத்தா !

சீர் மிகு சீத்தா !

சீத்தா மரம், வெப்ப மண்டலப் பகுதியில் எளிதாக வளரும்.இதன் பழம் பச்சை நிறமானது.; சதை, வெண்மை நிறத்துடன், மென்மையாக, இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

இதனுள் காணப்படும் விதைகள், கறுப்பு நிறத்தில் மின்னும்.அவை நச்சுத்தன்மை வாய்ந்ததாகும்.இதனால் பொதுவாக பயன்படுத்தப்படுவதில்லை.

சீர் மிகு சீத்தா !

சீத்தாப்பழம் பயன்கள்:

  • ஜீரண சக்தியை மேம்படுத்தும்.
  • ஜீரண வழித்தட ஆரோக்கியத்தை பேணும்.
  • மலச்சிக்கலைத் தடுக்கும்
  • வாந்தி பேதி, வயிற்றுக் கடுப்பு, கிறுகிறுப்பு, தலைச்சுற்றலை குணப்படுத்தும்.
  • சீத்தாக்காயை உலர்த்தி, பொடியாக்கி தலையில் தேய்த்தால், பேன் தொல்லை நீங்கும்.
  • சீத்தாப்பழ விதைப்பொடியோடு கடலைமாவு கலந்து, எலுமிச்சை சாற்றில் குழைத்து, தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்தால், முடி உதிர்வது குறையும்.

சத்துக்கள்:

  • இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், தாமிரச் சத்துக்இளை உள்ளடக்கியது.
  • ஆரோக்கியமான தோலுக்குத் தேவைப்படும் , வைட்டமின் ஏ சத்து நிரம்பவே உள்ளது.
  • பார்வைத் திறன் மேம்படவும் சீத்தாப்பழம் உதவுகிறது.
  • இதிலுள்ள மெக்னீசியம் சத்து, இதய அடைப்பு நோய் வராமல் பாதுகாக்கும்.
  • குறைவான கொழுப்புச்சத்தைக் கொண்டது.
  • இதன் சதையை விழித்தெழுந்து, பாலுக்கு பதில் , பானமாக பல நாடுகளில் பயன்படுத்துகின்றனர்.
  • இதன் மரப்பட்டையில் துவர்ப்பு சுவை அதிகம்; இதில் டானின் அமிலம் உள்ளது. எனவே, மருந்துகள் செய்யப் பயன்படுகிறது.

நன்றி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version