பியூஸ்லஸ் உடல் இன்று இலங்கை வருகிறது

மாலைதீவில் அகாலமரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்து வீரர் பியூஸ்லஸ் இன் உடல் இன்று இலங்கைக்கு எடுத்து வரப்படும் என இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.

நேற்று பியூஸ்லஸ்சின் வீட்டுக்கு கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், உப தலைவர் டுல்ஷான் நாகவத்த, கால்பந்தாட்ட சம்மேளன அலுவலகர் சம்பத் பெரேரா,முன்நாள் பயிற்றுவிப்பாளர் டட்லி ஸ்டைன்வோல் ஆகியோர் சென்று அவரது தாயாரிடம் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை வெளிவிவகார அமைச்சினூடாகவும், விளையாட்டுத்துறை அமைச்சினூடாகவும் மாலைதீவில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தினூடாக மாலைதீவு பொலிஸாரிடம் இறப்புக்கான சரியான காரணத்தை கண்டறியுமாறு கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை, அவரின் உடலை உடனடியாக நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

மரணசடங்களுகளுக்கான முழுமையான செலவுகளை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் முன்னெடுத்து செய்வதாக அறிவித்துள்ளது. அத்தோடு பியூஸ்லஸ் இன் உடல் ஒரு நாள் யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காகவும், இரண்டு நாட்கள் மன்னாரில் அஞ்சலிக்காகவும் வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த பியூஸ்லஸ் இற்கு ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனமும் அஞ்சலி செலுத்தியுள்ளது.

பியூஸ்லஸ் உடல் இன்று இலங்கை வருகிறது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version