யுக்ரைன் – ரஸ்சியா பேச்சுவார்த்தை ஆரம்பம்

யுக்ரைன் மீது ரஸ்சியா போரினை ஆரம்பித்து இன்றோடு ஐந்தாவது நாள். இந்த நிலையில் இரு நாடுகளது பிரதிநிதிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை அயல் நாடான பெலரஸ் நாட்டில் ஆரம்பமாகியுள்ளது. பெலரஸ் நாட்டின் எல்லைப்பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

போர் நிறுத்தத்தினை உடனடியாக அமுல் செய்வது, ரஸ்சியா படைகளை மீளப்பெறுவது ஆகிய இரண்டு குறிக்கோள்களை முன்னிலைப்படுத்தியே யுக்ரைன் பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.

பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் யுக்ரைன் ஜனாதிபதி ஷெலென்ஸ்கி ரஸ்சியா இராணுவம் ஆயுதங்களை கீழேவைக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவதை உடனடியாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்.

பேச்சுவார்த்தைக்கு பெலரஸ் அமைச்சர் வரவேற்றதோடு இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் பூரண பாதுக்காப்பு தமது நாட்டில் வழங்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். பெலரஸ் ரஸ்சியா ஆதரவு நாடு என்பதனோடு, ரஸ்சியாவின் இந்த படையெடுப்பு அந்த நாட்டினூடாகவும் ஆரம்பித்தது சுட்டிக்காட்டத்தக்கது.

யுக்ரைன் - ரஸ்சியா பேச்சுவார்த்தை ஆரம்பம்
Photo Courtesy CNN / Reuters
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version