தனியார் போக்குவரத்துக்கான கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளன. நேற்றைய தினம் போக்குவரத்து அமைச்சர் தினும் அமுனுகம மற்றும் தனியார் போக்குவத்து சங்க தலைவர் கெமெனு விஜயவர்தன ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான அனுமதியினை பெற்றதன் பின்னர் இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் விலையேற்றத்தை தெடர்ந்து எரிபொருள் மானியம் வழங்குமாறு அல்லது போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் போக்குவரத்த்து சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கையினை முன் வைத்திருந்தது.
டீசல் விலை அதிகரிப்புக்கு ஏற்ப கட்டண உயர்வை அதிகரிக்கவும், மிகவும் அதிகமான கட்டண அதிகரிப்பை மேற்கொள்வத்தில்லை எனவும் தனியார் போக்குவரத்து சங்கம் போக்குவரத்து அமைச்சருக்கு உறுதியளித்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
