விமானங்களுக்கு பாவிக்கப்படும் பெற்றோல் மற்றும் டீசல் துறைமுகத்தில் தேங்கிய நிலையில் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு கப்பல்களில் வருகை தந்துள்ள எரிபொருட்கள் ஐந்து நாட்களாக துறைமுகத்தில் இறக்காமல் காணப்படுவதாவும், கடன் உறுதி பத்திரம் திறக்கப்பட்டுள்ள போதும் பணம் வழங்கப்படாமையினால் இன்னமும் அவை இறக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
டொலர் இல்லாமையினாலேய இவ்வாறு பணம் வெளியிடப்படாமைக்கு காரணம் என நம்பப்படுகிறது. விமான எரிபொருள் 22,000 மெற்றிக் தொன் மற்றும் டீசல் 22,000 மெற்றிக் தொன் இவ்வாறு தேங்கியுள்ளதாக தெரிய வருகிறது. இதன் பெறுமதி 42,000 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
தாமத கட்டணத்தினை கப்பல் நிறுவனம் கோருவதனால் மேலதிக கட்டணத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையும் மேலதிக தாமதம் ஏற்படுவதாகவும் நம்பப்படுகிறது.
நேற்று முதல் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசை ஆரம்பித்துள்ளது. வரிசையில் நின்று பெற்றோலை பெறக்கூடியதாக உள்ள அதேவேளை, டீசல் முழுமையாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
