இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பணம் வழங்கப்படாமல் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமலுள்ள அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக விடுவிப்பு செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்திய அரச வங்கியுடன் 1 பில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் நேற்றைய தினம் நிதியமைச்சர் திறைசேரி செயலாளர் கையெழுத்திட்டிருந்தார். அதன் காரணமாக அமைச்சர் பந்துல குணவர்தன இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் விடுவிக்கப்பட்டால் இலங்கையில் நிலவி வரும் பொருட் தட்டுப்பாடுகள் குறைவடையும் சாத்தியங்கள் உள்ளன.
