வவுனியா வைத்தியசாலைக்கு 30 இலட்சம் பெறுமதியான ஒட்ஸிசன் உபகரணங்கள் நன்கொடை

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று 30 லட்சம் ரூபா பெறுமதியான ஒட்ஸிசன் இயந்திரங்கள்,மனதுருக்கம் இலங்கை அமைப்பினால் வழங்கப்பட்டது. கனடா ஜீவ வசன அர்ப்பணி சபையின் நிதியுதவியின் மூலம், மனதுருக்கம் இலங்கை அமைப்பு 8 இலத்திரனியல் ஒட்ஸிசன் இயந்திரங்களை வழங்கியுள்ளது.

இன்று(18.09) வவுனியா பிராந்திய சுகாதர திணைக்களத்தில், அதன் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.மகேந்திரனிடம், மனதுருக்கம் இலங்கை அமைப்பின் பணிப்பாளர் துரைராஜா குறித்த இயந்திரங்களை கையளித்தார். இந்த உயந்திரங்கள் உடனடியாக வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் கொரோனா தொற்று பிரிவுக்கு வழங்கப்பட்டு அதன் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

வவுனியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் நிலையில், நோயாளர்களிடம் ஒட்ஸிசன் வீழ்ச்சி ஏற்படும் போது அதனை சீர் செய்வதற்கு இந்த இயந்திரங்கள் மிக பெரியளவில் கை கொடுக்குமென வவுனியா பிராந்திய சுகாதர பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.மகேந்திரன் தெரிவித்தார்.

10 லீட்டர் கொள்ளளவுள்ள இந்த இயந்திரம் வேகமாக இயங்க கூடியது. ஆகவே நோயாளர்களுக்கு விரைவாக சிகிச்சை வழங்க முடியும். அத்தோடு 8 இயந்திரங்கள் இருப்பதானால் ஒரே நேரத்தில் பலருக்கும் சிகிச்சையளிக்க முடியுமென அவர் தெரிவித்தார்.

குறித்த இயந்திரங்களை வழங்கிய மனதுருக்கம் இலங்கை அமைப்பு, மற்றும் கனடா ஜீவ வசன அர்ப்பணி சபை ஆகியவற்றுக்கு வைத்திய கலாநிதி மு.மகேந்திரன் தனது நன்றிகளை வவுனியா மக்கள் சார்பாக தெரிவித்தார்.

வவுனியா பிராந்திய சுகாதர பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.மகேந்திரன் மற்றும் வவுனியா தொற்றுயிலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் ஆகியரது முயற்சியின் காரணமாகவே 30 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த உபகரணங்கள் வவுனியா மாவாட்ட பொது வைத்திய சாலைக்கு கிடைத்துள்ளன.

 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version