நாமல் பதவி வலகினார்

விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பதவி வகித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது பதவியினை இராஜினாமாக செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாகவும், அங்கு வைத்து இந்த முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் நிலைமைகளை சீர்செய்வதற்காக தனது அமைச்சு பதவியினை துறப்பதற்கு தயாராக இருப்பதாக நாமல் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இன்னும் பல அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நாளை முதல் புதிய இடைக்கால அமைச்சரவை அமைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாமல் பதவி வலகினார்

து

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version