ஜனாதிபதியின் அழைப்பு நிராகரிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சகல கட்சிகளையும் அமைச்சரவையில் பங்குபற்றுமாறு இன்று (04.04) அழைப்பு விடுத்திருந்தார். நாட்டின் தற்போதைய மோசமான நிலைமையினை சீர் செய்ய அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அமைச்சரவையினை உருவாக்க இந்த அழைப்பை விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) நிராகரித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் அனுர குமார திஸ்ஸநாயக்கே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி பதவி விலக வேண்டும். அதன் பின்னர் உரிய திட்டத்தின் கீழ் நாட்டின் நிலைமைகள் சீர்செய்யப்பட்டு, தேர்தல் நடாத்தப்பட வேண்டும். தேர்தலில் யாருக்கு மக்கள் ஆட்சியினை வழங்குகிறார்களோ அவர்கள் ஆட்சியினை தொடரவேண்டுமென மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரோடு அரச இணைவுக்கு எந்தவித சாத்தியமுமில்லை என தமது கட்சியின் நிலைப்பாட்டை அவர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்பு நிராகரிப்பு

Social Share

Leave a Reply