தங்கல்லையில் பாரிய போராட்டம் – பொலிஸார் தாக்குதல்

ஹம்பாந்தோட்டை, தங்கல்லையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டின் முன்றலில் நடைபெறும் பாரிய போராட்டத்தின் மீது காவற்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதோடு, தண்ணீர் தாக்குதலையும் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகின்றன.

இன்று காலை ஆரம்பித்த போராட்டத்தில்,காவல்துறையினரின் முன்னரங்க தடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களினால் தகர்க்கப்பட்டு இரண்டாவது தடுப்பில் தடுக்கப்பட்டுளள்னர். காலைமுதல் பிரதமரின் வீட்டுக்கு முன்னாள் கூடிய மக்கள் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில் அவர்களை கலைக்கும் நோக்கோடு பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டு தாக்குதல் மற்றும் தண்ணீர் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

தங்கல்லையில் பாரிய போராட்டம் - பொலிஸார் தாக்குதல்

Social Share

Leave a Reply