ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இடைக்கால அமைச்சர்களது நியமனம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மேலும் அதிருப்தியடைந்துள்ளதாகவும் குறிப்பாக நிதியமைச்சர் நியமனம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சு நியமிக்கப்படாமை போன்றவற்றால் குழப்பமடைந்துள்ளதாகவும் அதனால் அரசை விட்டு வெளியேறுவதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் ஜனாதிபதியின் அவசர அழைப்பின் பேரில் இன்று பிற்பகல் நடைபெறும் அல்லது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கலந்துரையாடலின் பின்னரே இறுதி முடிவு எட்டப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உயர்மட்ட தகவல்கள் ,மூலமாக அறிய முடிகிறது.
ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இராஜாங்க அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்து வருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர். அவர்கள் விலகினால் அரசாங்கம் 2/3 பெரும்பான்மையினை இழக்கும்.