பெருந்ததெருக்கள் அமைச்சர் ஜோன்சடன் பெர்னாண்டோவின் தலைய முடியை கூட எவராலும் தொட முடியாதென குருநாகல் மாநாரசபை முதல்வர் துஷார சஞ்சீவ சவால் விடுத்துள்ளார். தாங்கள் அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியாக இருக்கட்டும், மக்கள் விடுதலை முன்னணியாக இருக்கட்டும் முடிந்தால் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருநாகல் அலுவலகத்துக்கு வந்து பாருங்கள் என அவர் இன்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு ஆதரவாக நடாத்திய கூட்டத்தில் கூறியுள்ளார்.
இன்று குருநாகலில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் குருநாகல் முதல்வரினால் அமைச்சருக்கு ஆதரவாக கூட்டம் நடாத்தப்பட்டது.
“இரண்டு பேருக்கு தொலைபேசியில் கூறினேன். கூட்டம் வந்துவிட்டது” எனவும் அவர் தான் கூட்டிய மக்கள் கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
