ஒரே எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு டீசல் அதிகம் சென்றது ஏன்?

கொழும்பு, இராஜகிரிய பகுதியிலுள்ள அம்பத்தலே எனுமிடத்திலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குட்பட்ட புதிய எரிபொருள் நிலையம் ஒன்றுக்கு 79,200 லீட்டர் டீசல் நேற்று (05.04) மட்டும் அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எரிபொருள் காவு வண்டி உரிமையாளர் சங்கம் இந்த தகவலை வழங்கியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ள ஊடகம், இன்று 06 எரிபொருள் காவு வண்டிகளில் 36,000 லீட்டர் டீசல் குறித்த எரிபொருள் நிலையத்துக்கு வழங்க பற்று சீட்டிடடப்பட்டுளதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிலையத்துக்கு வழங்கப்பட்ட டீசல், பாவனையாளர்களுக்கு வழங்கப்படாமல் கொழும்பு, டிக்மன்ஸ் வீதியிலுள்ள ஹோட்டல்களுக்கு லீட்டர் 300 ரூபா விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக எரிபொருள் காவு வண்டி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ள அதேவேளை, குறித்த எரிபொருள் நிலையம் ஜனாதிபதி செயலக பிரத்தியோக செயலாளர் ஒருவரின் உறவினரின் எரிபொருள் நிரப்பு நிலையம் எனவும், குறித்த செயலாளரின் பணிப்பின் பேரிலேயே எரிபொருள் விநியோகம் நடைபெற்றதாகவும் மேலும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

8 நாட்களாக தாம் டீசலை பெற்றுக் கொள்ளவில்லை என்ற விநியோகஸ்தர்களது முறைப்பாட்டின் அடிப்படையிலும், பாவனையாளர்களின் முறைப்பாட்டின் அடிப்படையிலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுளளதாக செய்தி வெளியிடபப்ட்டுள்ளது.

ஒரே எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு டீசல் அதிகம் சென்றது ஏன்?
Gas station at night

Social Share

Leave a Reply