நாட்டின் பொருளாதரத்தை மீட்டெடுக்கும் தற்காலிக அல்லது கவனிப்பு ஜனாதிபதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க முடியுமென அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (06.04) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவியினை யாரும் பெற தயாரில்லையென்றால், பொருளாரதாரத்தில் சிறப்பு நிபுணுத்துவமுடைய ஹர்ஷ டி சில்வாவினை 06 மாதங்களுக்கு அந்த பதவிக்கு நியமிக்க முடியுமென தெரிவித்த ஹரின் பெர்னாண்டோ,
நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை தீர்க்க யாரும் உண்மையான ஆர்வத்தோடு உரிய நல்ல கருத்துக்களை வழங்கவில்லையென்ற கவலையை வெளியிட்டுள்ளதோடு, அரசியல்வாதிகள் வழமையான பாணியிலிருந்து விலகி யோசித்து ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்ற கோரிக்கையினையும் பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
