புதிய அமைச்சரவை தயாராகிறது

ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கம் புதிய அமைச்சரவையினை தயார் செய்து வருவதாக அறிய முடிகிறது. இன்று அல்லது நாளை புதிய அமைச்சரவை அறிவிக்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியினால் தேசிய அரசாங்கம் அல்லது அனைத்து கட்சிகளது அமைச்சரவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எந்த கட்சியும் அவ்வாறு இணைந்து கொள்ளவில்லை. மாறாக அரசாங்கத்திலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெளியேறி சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற அரச பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பில் புதிய அமைச்சரவை தொடர்பான விடயங்கள் பேசப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அறிய முடிகிறது.

பாராளுமன்றத்தில் 121 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு சார்பாக காணப்படுகின்றனர்.

புதிய அமைச்சரவை தயாராகிறது

Social Share

Leave a Reply