சுயாதீன விசாரணைகளுக்கு இடம் கொடுக்கும் முகமாகவும், நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறில்லாமல் இருக்கவும் இந்த இடம் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனை போராட்டக்காரர்கள் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள், குற்ற புலனாய்வு பிரிவினரிடம் பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுளளதாக பொலிஸ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயாதீன விசாரணைகளை நடாத்துமாறும், மூன்று தினங்களுக்குள் இடைக்கால அறிக்கையினை சமர்பிக்குமாறும் பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கு பணித்துள்ளார்.
சம்பவத்தில் இறந்த சமிந்த லக்ஷானின் இறுதி கிரியைகள் நாளை(22.04) இடம்பெறவுள்ள நிலையில் பொலிஸ்மா அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க முப்படை பாதுகாப்பு ரம்புக்கனை பகுதியில் வழங்கப்பட்டுளளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் நீதிபதியினால் நடாத்தபப்பட்ட விசாரணைகளில் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை சாட்சியாளர்கள் இனம் காட்டியுள்ளனர்.
ரம்புக்கணையில் நடைபெற்ற துப்பாக்கி சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய அதிகாரிகள் மூவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி(O.I.C), ரம்புக்கணை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் (S.P), கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்(S.S.P) ஆகியோரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
