வீதி தடைகளுக்கு எதிராக வழக்கு

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகளை அகற்ற கோரி அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு வீதி தடைகளை அமைப்பதாக இருந்தால் பொலிஸ் மா அதிபர் மேல் நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டுமெனவும் மனுதாரரினால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கம்பஹாவை சேர்ந்த நபர் ஒருவரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை இவ்வாறு தடை செய்ய முயடியாது எனவும், இந்த நடவடிக்கைகள் மூலம் வழமையான வேலைகளில் ஈடுபடும் சாதரண பொது மக்களும் பாதிப்படைவதாகவும் மனுவில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

வீதிகளில் முற்கம்பிகள் பொருத்தப்பட்ட வீதி தடைகள் பாவிக்கப்படுகின்றமை, அலரி மாளிகை முன்பதாக நடைபாதையில் பொலிஸ் வாகனங்களை பாவித்து நடை பாதையினை தடை செய்துள்ளமை போன்ற விடயங்களும் மனுதாரரினால் வழக்கில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

போலிஸ் மா அதிபர், கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி, வீதி அபிவிருதி அதிகார சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வீதி தடைகளுக்கு எதிராக வழக்கு

Social Share

Leave a Reply