மீண்டும் எரிபொருள் விநியோகம் சிக்கல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விநியோகங்களுக்கு பாவிக்கும் தனியார் எரிபொருள் காவி வண்டிகளது சங்கம் நேற்று முதல் மேற்கொண்டுள்ள பணி பகிஷ்கரிப்பின் விளைவுகள் நாளை தெரியவரும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

எரி பொருள் காவு வண்டிகளது 60 சதவீத கட்டண மாற்றம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமையினால் குறித்த சங்கம் தங்களது சேவைகளை இடைநிறுத்திக் கொண்டது.

இதன் காரணமாக நாளை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுமென கூறப்படுகிறது. நேற்றும், இன்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நின்று
வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த எரிபொருள் வண்டிகள் சேவைக்கு வராவிட்டால் வேறு வண்டிகளை உடனடியாக சேவைக்கு அமர்த்துமாறும், புகையிரதம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வண்டிகள் எரிபொருளை காவி செல்லுமெனவும் எரிபொருள் விநியோகத்தை சீராக வழங்க முடியுமெனவும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

புகையிரதம் மூமாக கிராம புர எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 40 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாகவும் உயர்த்தப்படவுள்ள அதேவேளை, எரிபொருள் காவு வண்டிகளுக்கு பதிவு செய்யும் நடவடிக்கை 1 மாதத்திலிருந்து 1 வாரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எரிபொருள் நிலைய உரிமையாளர்களது காவு வண்டிகளுக்கு தனியான வரிசை. எரிபொருள் நிலைய உரிமையாளர்களது காவு வண்டிகளுக்கு தனியான வரிசை.

ஆகிய நடைமுறைகள் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் எரிபொருள் விநியோகம் சிக்கல்

Social Share

Leave a Reply