இலங்கையிலிருந்து இந்தியா பயணித்தவர்கள் கைது

இலங்கையிலிருந்து இந்தியா பயணித்த 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுளள்னர். யாழ்ப்பாணம் பலாலி கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, தில்லை நகர் பகுதியினை சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம் பலாலி கடற்பரப்பினூடாக இந்தியா செல்ல முயற்சித்த வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு படகுகளில் பயணித்த 3 ஆண்கள், 3 பெண்கள், 5 சிறுவர்கள் மற்றும் 2 படகு உரிமையாளர்கள், எரிபொருட்களுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பலாலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து இந்தியா பயணித்தவர்கள் கைது

Social Share

Leave a Reply