வவுனியா ஓமந்தை பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 16 பேர் ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுளளதாக ஓமந்தை பொலிஸார் வி மீடியாவுக்கு உறுதி செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யார் என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். அவர்கள் ஆவா குழுவை சேர்ந்தவர்களா என்பது தொடர்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
—————————
முந்திய செய்தி
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோழியகுலம் வீதியில்(பொற்கோவில் வீதி) ஆவா குழு என சந்தேகிக்கப்படும் பெரிய குழுவினரை விஷேட அதிரடிப்படையினரும், ஓமந்தை பொலிஸாரும் கைது செய்துள்ளதாக அறிய முடிகிறது.
ஆவா குளுவென அச்சிடப்பட்ட பதாதைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் வி மீடியாவுக்கு தெரிவித்துள்ளனர். 50 பேருக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகின்றது. சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸாரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம்.