எரிபொருள் காவு வண்டி உரிமையாளர்கள் மேற்கொண்ட பணி பகிஷ்கரிப்பு இன்று மாலை முடிவுக்கு வந்துள்ளதாக எரிபொருள் காவு வண்டி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக எரிபொருள் விநியோகம் சீராகும் வாய்ப்புகளுள்ளன. எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்த்துள்ளார். மீண்டும் எரிபொருள் விநியோகம் ஆரம்பித்தால் மக்கள் வரிசையில் நிற்கவேண்டிய தேவை ஏற்படாது.
கடந்த சில தினங்களாக எரிபொருள் விநியோகம் பாரிய அளவில் குறைவடைந்திருந்த நிலையில், மக்கள் இன்னமும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கின்றனர்.
இன்று எரிபொருள் காவு வண்டி உரிமையாளர் சங்கத்துக்கும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவருக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பில், 40 சதவீத வாகன கட்டண அதிகரிப்புக்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் பணி பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுளளது.
