ஆரம்பமாகிறது பிக்பாஸ் சீசன்-5

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் பொழுது போக்கிற்கான முன்னணித் தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பலர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாகும்.

தற்போது இந்த வருடம் நடைபெற்றுவரும் 8வது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் பிரமாண்டமாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இறுதிப் போட்டியாளர்களாக 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 26ம் திகதி மதியம் 3 மணிக்கு நேரலையாக ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஆறரை மணி நேரம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வருவதையடுத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி மாலை 6 மணிக்கு விஜய் தொலைக்காட்சியின் மற்றுமொரு பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 5வது சீசன் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பமாகிறது பிக்பாஸ் சீசன்-5
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version