மக்களுக்காக தியாகங்கள் – சஜித்

இந்நாடு பேரழிவை சந்தித்திருக்கும் இத்தருணத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு நாட்டை கட்டியெழுப்புவதில் முனைப்போடு ஈடுபடுவதாகவும் அதற்காக எந்தவிதமான தியாகத்தையும் செய்வதற்கு இரு முறை சிந்திக்க மாட்டோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியினால் முன்வைக்கப்பட்ட 21 ஆவது சீர்திருத்தத்தின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கி ஜனநாயகத்தை பலப்படுத்துவது மிக முக்கியமான விடயம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், கடமை மற்றும் பொறுப்புக்கூறல் ஊடாக அரச நிர்வாகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவிற்கும்,ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆவது சீர்திருத்தத்திற்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் அம் முன்மொழிவுகளை அடிப்படையாகக்கொண்டு முற்போக்கான தீர்மானங்களை மேற்கொண்டு செயற்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்போது காணப்படுகின்ற பிரச்சினைக்கு மிக முக்கியமான காரணம் சர்வாதிகாரம் மிக்க நிறைவேற்று ஜனாதிபதி முறைமையாகும் என தெரிவித்த சஜித் பிரேமதாச, அதை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தை ஒருங்கிணைப்பாளர்களாக இணையுமாறு அழைப்பு விடுப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாட்டிற்கு ஜனநாயகத்தை பெற்றுத் தருவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் முற்போக்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பை தருமாறும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இன்று(08.05) காலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை சந்தித்ததன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இவ்வாறு தெரிவித்தார். இத்தருணத்தில் பதவிகளையோ, பொறுப்புகளையோ பெறுவது முக்கியமல்ல எனவும், சமூக மற்றும் தேசிய கடமைகளை நிறைவேற்றுவதே முக்கியமானது எனவும் மேலும்.கூறியுள்ளார்

அதற்காக முன்னெடுக்க வேண்டிய அனைத்து விதமான தியாகங்களுக்கும் தாம் தயாராக உள்ளோம் எனவும் நாடு முன்னேற வேண்டுமாயின் 21 ஆவது சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் உடனடியாக நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படவேண்டும் என தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்துள்ளார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு சகல சவால்களையும் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்காக தியாகங்கள் - சஜித்

Social Share

Leave a Reply