நாடு முழுவதும் ஊரடங்கு, 80 பேருக்கு மேல் வைத்தியசாலையில்.

இன்று காலை அலரி மாளிகைக்கு முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கலவரமாக மாறி, அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடாத்தியவர்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

ஏற்பட்டுள்ள அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையினை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடைபெற்ற கலவரத்தில் 80 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளள்னர்.

காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, அரசாங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ சார்பான குழுவினர் தாக்குதல் நடாத்தி அந்த இடங்களையும் மோசமாக நாசப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவங்களை பாதுகாப்பு துறையினர் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்ததாக கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

ராஜபக்ஷ கூட்டத்தினரின் மிக மோசமான திட்டமிட்ட தாக்குதல் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கூறியுள்ளார். சம்பவ இடத்துக்கு சென்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு, 80 பேருக்கு மேல் வைத்தியசாலையில்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version