முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அலரி மாளிகையினை விட்டு வெளியேறினார்.
போராட்ட காரர்கள் இரவு முழுவதுமாக அலரி மாளிகையினை முற்றுகையிட்டு காத்திருந்த போதும் கடுமையான முப்படை பாதுகாப்புக்கு மத்தியில் அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவர் எங்கு அழைத்து செல்லபப்ட்டுள்ளார் என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
வெளிநாட்டுக்கு அரசாங்கத்துடன் சம்மந்தமுடையவர்கள்தப்பி செல்லாதவாறு கொழும்பு ரத்மலான மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களில் போராட்ட காரர்கள் கண்காணித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு போராட்டகாரர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையில் நடைபெற்ற மோதலில் காவலுத்துறையினை சேர்ந்த ஒருவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரையில் 237 நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.