பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரை விசாரணைகளுக்கு சமூகளிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அவர்களுக்கு மனு அனுப்பி வைத்துள்ளது.
நேற்று(09.05) நடைபெற்ற சம்பவங்களை தடுக்க தவறியமைக்காகவும், இவ்வாறான சமப்வங்கள் நடைபெற இடமளித்தமை தொடர்பிலும் விசாரணை செய்ய பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரட்ன மற்றும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா ஆகியோர் வியாழக்கிழமை(12.05) மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் உலக நாடுகள் கண்டனங்களை தெரிவித்த அதேவேளை தொடர்ந்தும் அவதானித்து வருவதாகவும், தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.