வீடு எரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து

முன்னாள் ஊடக துறை அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா “தான் 18 மாதங்களுக்கு முன்னரே பாராளுமன்றத்துக்கு வருகை தந்தவன். அதற்கு முன்னர் 28 வருடங்களாக தொழில் மூலம் என் குடும்பம் வாழ்வதற்கான சகலவற்றையும் சேர்ந்து வைத்திருக்கிறேன்” என ட்விட்டர் பதிவினை மேற்கொண்டுள்ளார்.

“வன்முறையாளர்கள் எனது வீட்டை எரியூட்டியுள்ளனர். இதனால் சிலர் சந்தோசப்படுவார்கள். சிலர் கவலைப்படுவார்கள். சிலருக்கு இது பற்றி அக்கறையில்லை” என தன்னுடைய கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இலத்திரனியல், தொலைத் தொடர்பு பொறியியலாளரான இவர் 2009 மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கபப்ட்டிருந்தார். லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் தலைவராக தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பொறுப்பேற்றிருந்த காலத்தில் அந்த முகாமைத்துவதில் இவருடைய ஈடுபாடு இருந்தது.

க்ரிஸ் நிறுவன மோசடியில் இவருடைய பெயரும் இருந்துள்ளது. அத்தோடு நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் விசாரணைகளில் இவருடைய பெயரும் காணப்பட்டது.

வீடு எரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து

Social Share

Leave a Reply