பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று நடைபெறவிருந்த கட்சி தலைவர்களது கூட்டத்தினை சபாநாயகர் இரத்து செய்திருந்தார். இன்று அந்த கூட்டம் இணைய வழியூடாக ஷூம் இயங்கு தளம் மூலமாக நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் ஜீவன் தொண்டமான் ட்விட்டர் மூலமாக தெரிவித்திருந்தார். அதனை தமிழ் அரசுக் கட்சி பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் வரவேற்றிருந்தார்.
