வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த வரையறை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வலுசத்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்புவதற்காக அதிகரிக்கப்பட்டுள்ள விபரங்கள்
மோட்டார் சைக்கிள் 2000 ரூபாவிலிருந்து 2500 ரூபா
முச்சக்கர வண்டி 2000 ரூபாவிலிருந்து 3000 ரூபா
ஏனைய வாகனங்கள் 8000 ரூபாவிலிருந்து 10,000 ரூபா.
இந்தியா எக்சிம் வங்கி வழங்கியுள்ள 500 மில்லியன் அமெரிக்கா டொலர் குறுங்கால கடன் திட்டத்தின் மூலம், எரிபொருள் கொல்வனவை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் மேலும் எரிபொருள் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு குறைவடையும் சாத்திய கூறுகள் காணப்படுகின்றன.
எரிபொருள் வரையறை அதிகரிப்பு மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் கொள்வனவு மற்றும் விநியோகம் மூலம் எரிபொருள் வரிசை குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சில பிரதேசங்களில் டீசலுக்கான வரிசை குறைவடைந்துள்ளதாகவும் அறிய முடிகிறது. இன்று எரிபொருள் விலையேறியுள்ள நிலையில் எரிபொருள் சேமிப்புக்காக வரிசையில் நிற்பது குறைவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெற்றோலுக்கான வரிசையே அதிகரித்துள்ள நிலையில் பெற்றோல் வரத்தும் அதிகமாகியுள்ளமையினால் பெற்றோல் வரிசையும் இந்த வாரத்தில் குறைவடையும் நிலை காணப்படுகிறது.