லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் அடுத்த வார நடுப்பகுதி, அதாவது ஜூன் மாத முதற் பகுதிக்கு செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு நேற்று வருகை தந்த எரிவாயு சிலிண்டர்களை தாங்கிய கப்பல் இந்தியா நோக்கி திருப்பப்பட்டமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நாளை சமையல் எரிவாயு விநியோகம் நடைபெறுமென முதலில் லிற்றோ நிறுவனம் அறிவித்திருந்தது. இருப்பினும் தற்போது திகதி தெரிவிக்காமல், அடுத்த கப்பல் வந்தால் மட்டுமே விநியோகம் நடைபெறுமென அந்த நிறுவனம் கூறியுள்ளது.
நேற்று(26.05) வருகை தந்த கப்பலுக்கு எரிபொருள் நிரப்ப முடியாத நிலையிலேயே இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஞாயிற்றுக் கிழமை ஒரு எரிவாயு கப்பல் வருகை தரவுள்ளதாகவும், அவ்வாறு வருகை தந்தாள் திங்கட்கிழமை முதல் விநியோகத்தை மேற்கொள்ளலாம் என லிற்றோ நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை கப்பல் வருகை தருமா என்ற சந்தேகமும் நிலவுவதனால் அடுத்த வார நடுப்பகுதி வரை சமையல் எரிவாயு விநியோகம் தள்ளி போகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
மக்களை சமையல் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிற்றோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
