அரச ஊடக பிரதானிகளை பதவி விலக பணிப்பு

அரச இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக பிரதானிகளை அவர்களது பதவிகளிலிருந்து விலகுமாறு ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சுயாதீன தொலைக்காட்சி சேவையின்(ITN) தலைவர் நிரோஷன் பிரேமரட்ன தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

நிரோஷன் பிரேமரட்ன சுயாதீன தொலைக்காட்சி அறிவிப்பாளராக கடமையாற்றி 2015 ஆம் ஆண்டு மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். ஆனால் கடந்த தேர்தலில் இவர் தோல்வியடைந்தார். அதனை தொடர்ந்து இந்த வருடம் ஜனவரி மாதம் சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அரச ஊடக பிரதானிகளை பதவி விலக பணிப்பு

Social Share

Leave a Reply