வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை அமுல்செய்ய முடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. துமிந்த சில்வாவை கைது செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவியேற்றதும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவை கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி சிறையிலிருத்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
அவர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக பாரதலக்ஷ்மன் பிரேமாசந்திரவின் மனைவி மற்றும் மகளான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா ஆகியோரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
கடந்த மே 09 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற கலவரங்களின் போது துமிந்த சில்வா சிங்கப்பூர் சென்றிந்தார். ஆனால் அவர் மீண்டும் நாடு திரும்பியதாக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
