கடந்த சில தினங்களில் அசாதரண இறப்புகள் மக்கள் மத்தியில் பதட்ட சூழலை ஏற்படுத்தியுள்ளது. பாணந்துறை சிறுமி ஆயிஷாவின் கொலையின் பின்னர் மக்கள் அச்சப்படக்கூடிய அசாதரண சம்பங்களும், இறப்புகளும் இலங்கையில் நடைபெற்று வருகின்றன.
நேற்று வவுனியாவில் 16 வயது மாணவியின் உடல் பாழடைந்த கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த இறப்பில் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குடும்ப தகராறு காரணமாக, புத்தளம் மாவட்டம் நாகவத்தேகம என்ற இடத்தில் தங்கையினது கணவன் – மனைவி பிரச்சினையை தீர்க்க சென்ற 32 வயது ஆண் கத்தியால் தாக்கப்பட்டு இறந்துள்ளார். அந்த பெண்ணும் கணவரினால் கொல்லப்பட்டுள்ளார். காயங்களுக்குள்ளான கொலை சந்தேக நபர் பொலிஸ் காவலில் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
களுத்துறை, ஹீனத்தியனகலவில் மர்மான முறையில் 69 வயதான தந்தையும், 33 வயதான மகளும் வீட்டினுள் இறந்த நிலையில் நேற்று உடல்கள் மீட்கப்பட்டுள்ள. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
