சிறுபான்மையினரின் பிரதிநித்துவத்தை குறைக்கும் தேர்தல் முறை வேண்டாம் – மனோ MP

சிறுபான்மையின மக்களின் பிரதிநித்துவத்தை இல்லாதொழித்து நாட்டை சர்வதிகார போக்கில் மென்மேலும் கொண்டு செல்ல ஒருபோதும் இணங்க முடியவே முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றி, இந்த வரலாற்று தவறு உங்கள் தலைமையில் ஏற்பட்டது என்ற பழிச்சொல் உங்கள் மீது விழாமல் தவிசாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன எச்சரிக்கையாக செயற்பட வேண்டும் என இன்று தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக்குழுவின் முன் தமிழ் முற்போக்கு கூட்டணி சாட்சியமளித்த போது பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சிங்கள மொழியில் கூறியதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவருடைய அறிக்கையில் கீழுள்ள விடயங்களை மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ம் திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்கப்பட்ட நிலையில், மாகாணசபை, பாராளுமன்ற தேர்தல் முறைகளை கலப்பு முறைக்கு மாற்றி, சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவங்களையும் ஒழித்து, பாராளுமன்ற, மாகாணசபை மக்கள் மன்றங்களை மேலும் பலவீனமாக்கி, நாட்டை சர்வதிகார போக்கில் மென்மேலும் கொண்டு செல்ல ஒருபோதும் இணங்க முடியவே முடியாது.
சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை வெட்டி குறைத்தால், தமது குரலை ஒலிக்க, வேறு வழி இல்லாமல் ஆயுதம் தூக்கும் நிலைமை ஏற்படலாம். அந்நிலை வடகிழக்கில் மட்டுமல்ல, தெற்கிலும் ஏற்படலாம்.
பாராளுமன்றத்தில் நியாயமான பிரதிநிதித்துவங்களை பெற முடியாத நிலையில், தென்னிலங்கை சிங்கள இளையோரும் இப்படி ஆயுதம் தூக்கினார்கள் என்பதையும் மறக்க வேண்டும்.

இது, தெரிவுக்குழுவுக்கு வெளியேயும் பெரும்பான்மை சமூகத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்களையும் எட்டியுள்ளது என்பதை, சற்று முன் எனக்கு கிடைத்த ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் அறிய முடிந்தது.


நான் சொல்வதும், எழுதுவதும், அவர்களுக்கோ, நம்மவருக்கோ, விளங்கினாலும், சரி, விளங்காவிட்டாலும் சரி, எமது எதிர்கால பரம்பரையை எண்ணி நான் எப்போதும் செய்ய வேண்டியதை செய்வேன்

சிறுபான்மையினரின் பிரதிநித்துவத்தை குறைக்கும் தேர்தல் முறை வேண்டாம் - மனோ MP
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version